பக்கம்:பாரதித் தமிழ்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்க மஹா சபை 273

ஆஸ்ேது ஹிமாசல பர்யந்தம் உள்ள ஹிந்துக்க ளெல்லாம் ஒன்று என்ற மூல மந்திரத்தை நிலை நாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட் டம். வேதத்தை நம்புவோ ரெல்லாம் ஸ்ஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம் ஜாதிபேதம் குலபேதம் பாஷாபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுத்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்பு வோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று.

ஹிந்துக்கள் உயர்ந்த நிலைமைக்கு வர வேண்டு மானுல் ஐக்யநெறியை உடனே அனுசரிக்க வேண் டும். போன வருஷம் கீழ்க்கடலோரத்திலே பெரிய புயற்காற்றடித்தது. ஒன்று கூடியிருந்த வீடுகள் பிழைத்தன. தனிக் குடில்களெல்லாம் காற்றிலே பறந்து போயின. உலகத்தில் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய அறம், புதிய நெறி தோன்றக் கூடிய காலம் பிறந்து விட்டதென்று மேதாவிக ளெல்லாரும் ஒருங்கே சொல்லுகிறார்கள். இங்ஙனம் புதிய ஞானம் பிறக்க வேண்டுமானல் அதற்கு ஹிந்து மதமே முக்ய ஸாதனமென்று நாம் சொல்லு கிருேம். ஸ்வாமி விவேகாநந்தர், ரவீந்த்ர நாத டாகுர், ஜகதீச சந்திரவஸ் முதலிய பெரியோர் களும் அங்ஙனமே சொல்லுகின்றார்கள். இந்த ஸமயத்தில் ஹிந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்து கிடந்தால், ஹிந்து தர்மத்தின் மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி?

ஹிந்து தர்மம் பெருமாள் கோயிலைப் போலே; நிற்பது எங்கே நின்றாலும் அத்தனை பேருக்கும் ப்ரஸ்ாதமுண்டு. பகவத் ஸந்நிதியில் ஜாதிபேத

f_ffs. த.-18