பக்கம்:பாரதித் தமிழ்.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பர்ரத் தமிழ்

மில்லை. அத்தனை பேரும் கலந்து நிற்கலாம். ஹிந்து தர்மம் , சிதம்பரத்தைப் போலே. அதனுள்ளே, பறையரும் ஒளியில் கலந்து விடலாம். மேலும் தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக் கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் த னிடமில்லை. தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட் டான். பள்ளிக்க்ட்த்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிம்ானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும், தமிழராகப் பிறந் தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும், இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி. தமிழிலபிமானமுள்ள வன் ஹிந்து தர்மத்தைக் கைக்கொண்டு நிற்பவன். அதுவே தமிழபிமானியைச் சோதிக்கும் வழி ஏனென்றால் தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்ப ராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை. மேற்படி நூல்களை நன்றாக உணர்ந்தவன் ஹிந்து தர்மத்தாலேயே இந்த உலகம் நிலைபெற்று நிற்கு மென்பதை அறிவான். ஸர்வ தர்மங்களுக்கும் ஹிந்து தர்மமே வழிகாட்டி யென்பதைக் காண் பான். ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்தினல் ஆந்திரர். கன்னடர், மராட்டியர், ஹிந்துஸ்தானிகள், குஜ ராத்திகள், வங்காளிகள், தமிழர், மலையாளர் எல்லாருக்கும் நல்ல காலம் பிறக்கும். ஆதேசம் சொல்லுகிறது:-"வேத வழியே வழி. வேறு வழியில்லை.”