பக்கம்:பாரதித் தமிழ்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ராயச்சித்தம்

காளிதாஸன்

21 ஜூன் 1917 பிங்கள ஆனி 8 என்னுடைய ஸ்நேஹிதர்களில் ஒருவராகிய ராமராயர் இங்கிலாந்துக்குப் போயிருந்தார்.

திரும்பி வேதபுரத்துக்கு வந்தார். அவருக்கு ஒருவித மான வேதாந்தப் பயித்தியம். ப்ரம்மமே ஸ்த்தி யம். லோகமெல்லாம் மித்தை. ஆதலால் எல் லாரும் ஸந்நியாலம் வாங்கிக்கொள்ள வேண்டும். தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். சடைகளாகத் திரித்து விடலாம். அப்படிச் செய் தாலும் குற்றமில்லை. எப்போதும் ஒம், ஒம் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஐம் புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு சுத்த ப்ரம்ம நிலையோ, அல்லது அதற்குப் போகிற பாதையோ, ஆகிய நிர்விகற்ப ஸ்மாதியில் நிற்கவேண்டும். இது அவருடைய மதம்: ஆனல் அவருடைய நடை மற்ற மனுஷ்யர்களைப் போலேதான்.

ஸ்ந்யாஸம் வாங்கவில்லை; தலை மொட்டையு மில்லை; சடையுமில்லை; ஒங்காரத்தைத் தவிர வேறு வார்த்தைகளும் சொல்லிக்கொண்டுதான் வருகிரு.ர். நிர்விகற்ப ஸ்மாதியிலே அவர் இருப்பதை நான் பார்த்ததே கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/275&oldid=605612" இலிருந்து மீள்விக்கப்பட்டது