பக்கம்:பாரதித் தமிழ்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ராயச்சித்தம் 277

மேற்படி ராமராயர் இங்கிலாந்தில் இருக்கும் போது, ஐரோப்பியர் கண் பார்க்காமல் கை எப் டிச் சமைக்கும்? ஐரோப்பியர் சமையல் பண்ணின பதார்த்தங்களை நாளொன்றுக்கு நான்கு முறை யாகப் பத்து வருஷ காலம் நிர்விக்நமாக போஜனம் செய்துகொண்டு வந்தார். (இந்த விஷயத்தில் அவர்மேலே அதிகக் குற்றம் சொல்ல இடமில்லை. ஐரோப்பாவில் ஐரோப்பியர் சமையல் பண்ணின தைத் தின்னமல் எப்படிப் பிழைக்க முடியும்? இங்கிருந்து பிராம்மணப் பரிசாரகர்களில் நூறு நூற்றைம்பது பேரைக் கொண்டு லண்டன் பட்ட ணத்தில் குடியேற்றினுல் நம்மவர்கள் போய் ஜாதி யா.சாரங்களுக்கு விரோதமில்லாதபடி அங்கிருந்து படித்து வைதிகக் கலெக்டர்களாகவும் வைதிக பாரிஸ்டர்களாகவும் திரும்பி வர இடமுண்டாகும். ஸ்வாமி விவேகானந்தர் ஐரோப்பாவிலும், அமெரிக் காவிலும் ஸஞ்சரித்த காலத்தில் பசுக் கறி முதலிய வற்றை யதேஷ்டமாக சாப்பிட்டதாகப் பாதிரிகள் இந்தியாவில் கூக்குரல் போட்டதைப் பொறுக்க முடியாமல், சென்னப் பட்டணத்திலிருந்து சில வைதிக சிஷ்யர்கள் வருத்தப்பட்டு விவேகானந்த ருக்குக் காயிதம் போட்டார்கள். அடுத்த கப்பலில் ஒரு வைதிக பரிசாரகனும், வைதிக போஜனங்களும் இந்தியாவிலிருந்து அனுப்பினால், தான் வைதிகமாக உண்பதில் ஆக்ஷேபமில்லையென்று விவேகானந்தர் மறுமொழி எழுதினராம்.) ராமராயர் இங்கி லாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னர்கள். அவர் பண்ணிக்

கொள்ளவில்லை. ஆனல் இங்கு வந்த பிறகு சுத்த