பக்கம்:பாரதித் தமிழ்.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 பாரதி தமிழ்

மான பிராமணர் சமையல்தான் சாப்பிடுகிரு.ர். பிராமண ஆகாரம் அவருக்கு நன்றாக ஒத்து வரு கிறது. உடம்புக்கு ஒன்றும் செய்வதில்லை. மற்ற நடைகளும் அப்படியேதான். மூன்று வேளையும் லந்த்யாவந்தன, மாத்யான்ஹிகங்கள் தவறுவ தில்லை. அமாவாசை தோறும் ச்ரியான தர்ப்பணம்: வருஷத்தில் ஐந்தாறு சிராத்தம். எல்லாம் கிரம மாகவே நடத்தி வருகிறார், ஒரே ஒரு புரோஹி தரும் அனேக லெளகிகரும் இவரை ஜாதியில் சேர்த் துக்கொண்ட மாதிரியாகவே நடந்து வருகிறார்கள். பல புரோஹிதரும், சில லெளகிகரும் கொஞ்சம் ஒட்டியும் ஒட்டாமலும், தாமரை நீர் போலிருக் கிறார்கள். சிலர் ஒட்டாம்லே விலகியிருக்கிறார்கள். போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம் பண்ணிக் கொள்ள இஷ்டப் படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற் படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக் கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரி களிடம் போய்ச் சொன்னேன். இந்த ரங்கநாத சாஸ்திரிகளுடைய மாப்பிள்ளை ஒருவன் ரங்கூனிலே போய்க் காபிக் கடை வைத்திருக்கிருன். தமிழ்த் தேங்குழல், தமிழ் முறுக்கு தேர்சை, வடை கடலைச் சுண்டல் முதலிய பrணங்களைக் கொஞ்ச மேனும் வட இந்தியா ஆர்ய சம்பந்தமில்லாதபடி நன்றாகப் பண்ணிக் கொடுத்து அங்குள்ள தமிழ் மக்களெல்லாம், இந்த பிராமணனை மிகவும் அருமையாகப் பாராட்டினபடியால் நல்ல பணக் காரளுகி, அங்கே தனது மனைவியாகிய மேற்படி சாஸ்திரிகளுடைய பெண்ணும், தானும் நாலைந்து குழந்தைகளுமாக செளக்கியத்தோடு வாழ்ந்து வருகிருன். இந்தக் காரணத்தை யொட்டி மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் மாப்பிள்ளையுடன் எவ்வித