பக்கம்:பாரதித் தமிழ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பாரதி தமிழ்

இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்த்யா வந்த னம் எவ்வளவும் சொற்பம்? தீர்த்த பானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா! இந்த ரிஷி களெல்லாரும் என்ன ப்ராயச்சித்தம் பண்ணு கிரு.ர்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர் மானுஷ்டானங்கள் தவருமல் நடத்தி வருகிரு னென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதி ப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினல் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தள்ளுங்காணும்! ப்ராயச் சித்தமாவது, வெங்காயமாவது! நான் ஏதோ உதர நிமித்தமாக இந்த வைதிகத்தை விட முடியாமல் கட்டுப் பட்டுக் கிடக்கிறேன். இதில் மற்றவர் வந்து சேர்வதிலே எனக்கு ஸம்மதமில்லை. ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளு வதில் எனக்கு இஷ்டமில்லை. ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் செய்து வைக்கிறேன். ஆக்ஷேபமில்லே. அப்படியே அவர் ப்ராயச்சித்தம் செய்தாலும் நான் அவருடன் பந்தியிலிருந்து சாப்பிட மாட்டேன்’ என்றார். இதை நான் ராமராயரிடம் வந்து சொன்னேன். ராமராயர் ப்ராயச்சித்த யோசனையை நீக்கி விட்டார்.

_

பெண் விருதலை

காளிதாஸன்

25 ఇఅచేr 1917 பிங்கள ஆனி 12

பார்க்க:-மூன்றாம் தொகுதி. பகுதி-மாதர். இப்

பகுதியில் பெண் விடுதலை (1) என்ற தலைப்பில் வெளியாகி புள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/281&oldid=605626" இலிருந்து மீள்விக்கப்பட்டது