பக்கம்:பாரதித் தமிழ்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாதாபாய் தெளரோஜி

சி. கப்பிரமணிய பாரதி

4 g్మలిరీ 1917 பிங்கள ஆனி 21

தாதாபாய் நெளரோஜி ஜீவதசைமாறி ஆத்ம தசை யடைந்து விட்டார். 92 வருஷம் இந்த உலக வெள்ளத்திலே எற்றுண்டு பயன் மாறிப் போன மண் தோணியைக் களைந்துபோய் விட்டார். அவருடைய புகழுடம்பிலிருந்து ஹிந்துஸ்தானத் தின் கார்யங்களை ஆத்ம ஸ்வரூபியாகி நடத்தி வருவார். “தாதாபாய் நெளரோஜி இறந்து போனர். தாதாபாய் நெளரோஜி நீடுழி வாழ்க.”

தாதாபாய் நெளரோஜி இறந்து போகவில்லை. அதஞலேயேதான் நீடுழி வாழ்கவென்று சொல்ல இடம் உண்டாகிறது. நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படி செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர். தன்னை மறந்து குற்றுயிரோடு கிடந்த ஹிந்து தேசம் மறுபடியும் உயிர் கொண்டு, ஸ்மரணைபெற்று வலிமை காட்டும் என்று தாதாபாய் ஒரு நாளா, இரண்டு நாளா, 70 வருஷம் இடைவிடாது நம்பினர்.