பக்கம்:பாரதித் தமிழ்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பாட்ரு

1917-ல் அதாவது பிங்கள வருஷம் ஆவணி மாதத்தில் பாரதியார் எழுதிய கண்ணன் பாட்டின் முதற் பதிப்பு வெளியாகி யிருக்கிறது.

திரு. பரலி. சு. நெல்லையப்பப் பிள்ளை அவர்கள் பிங்கள ஆவணி 1 என்று தேதியிட்டு இதற்கு ஒரு முகவுரை எழுதி யுள்ளார்கள். அதிலே, ‘g|மான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர். இவர் தமிழ் நாட்டு ரவீந்திரநாதர். இவர் எனது தமிழ் நாட்டின் தவிப்பயன்’ என்றும், “இந்த் ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ் நாட்டு ம்ாதர்களும் புருஷர் களும் மிகுந்த இன்பத்துட்ன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” என்றும் திரு. நெல்லையப்பர் எழுதியிருக்கிரு.ர்.

‘கண்ணன்-என் அரசன் என்ற பாடல் இந்த முதற் பதிப்பில் காணப்படவில்லை.

முதற் பதிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகளில் இதன் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது. அதற்கு வ. வெ. சு. ஐயர் சித்தார்த்தி ஆவன்னி 22 என்ற தேதியிட்டு ஒரு அழகிய முன்னுரை எழுதியிருக்கிரு.ர்.

‘கவிதா ரீதியாகப் பார்க்கும்போது, இக் கீர்த்தனங் களுள் பெரும்பாலவையிலுள்ள சுவை தேனினும் இனிதா யிருக்கிறது.

‘இன்னென்று: கவிதை அழகை மாத்திரம் அனுபவித்து விட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை தாளத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/287&oldid=605634" இலிருந்து மீள்விக்கப்பட்டது