பக்கம்:பாரதித் தமிழ்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கள்

சி. சுப்பிரமணிய பராதி

19 அக்டோபர் 1917

கண்கள் சிவந்து பெரியவாய்’ என்றார் நம் மாழவாா.

எம்பெருமானுடைய கண்களைச் சொல்லுகிரு.ர். விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களுடைய கண்ணும் திருமாலுடைய கண்ணைப் போலவே இருக்கும். தாமரைப் பூவைப் போலே கண் வேண்டும் என்பர். திறந்த பார்வை வேண்டும்.

மூடின கண் மறைந்த ஒளியைக் காட்டுகிறது. யோகி கண்மூடி ஜபம் பண்ணுகிருனே அதை நான் சொல்லவில்லை. ஸாமான்ய ஜனங்கள் கண்ணை முழுதும் விழித்துப் பார்க்காமல் அரைப் பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கிற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக் கிறேன். இது நிற்க.

நான் சென்னப்பட்டணத்தில் இருந்தபோது ரு சாமியாருடன் ஸ்நேகப்பட்டேன். அவர் சுதேசியம், அன்னிய வஸ்து பகிஷ்காரம், ஸ்வராஜ்ய ஸ்தாபனம் என்ற விஷயங்களைப் பற்றி ஆத்திரத் தோடு பேசுவார். அவர் கண்களை இமைக்காமலே நெடுநேரம் இருப்பார்; மனிதர் இமைக்காமலே இருந்து விடலாம் என்று அந்தச் சாமியார் சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/289&oldid=605637" இலிருந்து மீள்விக்கப்பட்டது