பக்கம்:பாரதித் தமிழ்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


294 பாரதி தமிழ்

சண்டை முடிந்தால் வாங்கின கடனுக்கு வட்டிச் செலவும் அதிகப்பட்டுக் கொண்டு போகும் ஆதலால் நாம் ராஜாங்கத்தாரிடம் இவ்விஷயத்தில் அதிக உதவி எதிர்ப்ார்க்க இடமில்லை.

ஆண், பெண், அடங்கலாக நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இளும் படிப்புக் கட்டாய மாய்ச் சொல்லி வைக்கவேண்டும். இது ராஜாங்கத் தாருடைய கடமை. ஆனல் நம்முடைய ராஜாங்கத் தார் இப்போதுள்ள நிலைமையில் அவர்கள் இந்தக் காரியம் செய்யமாட்டார்கள்.

நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய் வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக் காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக் கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப் பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய் வத்தை வேண்டுகிருேம். ஒரு நாட்டில் உள்ளஎல்லா விதமான குறைகளுக்கும் புத்திக் குறையே ஆதாரம். இது படிப்புக் குறைவினல் உண்டாவது. இந்தக் குறையை நீக்குவதில் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தல் மிகவும் அவஸரம்.

‘கண்ணுடைய ரென்பவர் கற்ளுேர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா கவா."