பக்கம்:பாரதித் தமிழ்.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


296 பாரதி தமிழ்

காக்கைக்கு நூறு வயது. அது எளிதிலே சாகாது. புயற்காற்றில் பதிஞயிரக் கணக்கான காக்கைகள் மடிந்தன. தெருவெவ்லாம் காக்கை .ெ சத் து விழுந்து கிடந்தது. பார்த்தவர்கள் அழுதார்கள். இரண்டு காக்கையோ மூன்று காக்கையோ மிஞ்சி யிருப்பதுபோலே தோன்றிற்று. இப்போது பார்த் தால் ஏறக்குறைய பழைய ஜனத்தொகை காக ஜாதியில் உண்டாய் விட்டது. காக்கை வலிய பறவை; அது நம்மைக் காக்கிறது; அதை நாம் கும்பிடவேண்டும்.

4. வருஷம் என்பது மழை; ஆண்டுக்கும் பெயர்.

5. திருப்பதி என்பது ஒரு க்ஷேத்திரத்துக்கும், ஸெளபாக்ய நிலைமைக்கும் பெயர். 6. அன்னம் என்றால் உணவு. அன்னம் என்பது வஸ்து. லத்தியத்துக்கும், ப்ரஹ்மத்துக்கும் அன்னம் என்று பெயர். பிராம்மணர் ஸத்யந்த்வர்த்தேந பரிஷிஞ்சாமி” என்று சொல்லி அன்னத்தை ஜலத் தில் சுற்றுகிறார்கள். அங்கு ஸத்யம் என்றது ஆகா ரத்தை ரிதம் என்றது ஜலத்தை. ஸத்யம் என்பது உண்மைக்கும், ரிதம் நேர்மைக்கும் பெயர். நேர்மை யாவது தைர்யம். நாம் அறிந்த உண்மைப்படி நடக்கும் துணிவு. உண்மை ப்ருதிவியினுடைய அம் சம், துணிவு ஜலத்தினுடைய அம்சம் என்று வேதாந்த சாஸ்திரம் சொல்லுகிறது.

அன்னம் அமிர்தம். வைஷ்ணவர், போஜனமாயிற்றா?” என்பதற்கு “அமுது செய்தாயிற்றா?” என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையால்ே காக்கவேண்டும்.

ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியா தவன் மூடன்,