பக்கம்:பாரதித் தமிழ்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பாரதி தமிழ்

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப் நமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண் ணுக்குப் படாமல் என்ன இழவு வேண்டுமானலும் செய்துகொண்டு போங்கள்.

பகிரங்கமாக எங்கள் நெஞ்சை உடையும்படி செய்வதில் உங்களுக்கு லாபமென்ன? பேகாரில் கலகம் நேர்ந்ததுபோல் மொஹரம் பண்டிகை சம யத்தில் நாட்டில் வேறெந்தப் பக்கத்தில் எவ்வித மான கலகமும் நடக்காமல், மொஹரம் பண்டிகை சுபமாக முடிவெய்தி, ஹிந்து மஹமதிய ஸ்ஹோத ரத்வம் ஸ்தாபனமாய்விட்டது பற்றி நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன்.

ஒரே, ஒரிடத்தில் மாத்திரம் கலகம்! அதுவும் நடக்காமல் இருந்திருக்க வேண்டும்! அந்தப் பக்கத்து ஜனத் தலைவருடைய குற்றம்; போனல் போகிறது. ஹிந்து முஸ்லிம் ஒன்று; இணங்கி வாழ்வது நன்று.

பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வ மென்று கும்பிடுவதுபோல், கஷ்ட்ப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னேர் நடத்தியபடி இப் போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிருன். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிருன். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கிமுேம்? வெறுமே பூவைப் போட்டுக்கும்பிட்டால் மாத்திரம் போதுமா?

நம்முடைய பக்தியை நாம் செய்கையில் காண்

பிக்க வேண்டும். காண்பித்தால் பிறரும் நமது கொள்கைகளுக்கு அவமதிப்புச் செய்யாமல் மரியா தையாக நடந்து கொள்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/297&oldid=605650" இலிருந்து மீள்விக்கப்பட்டது