பக்கம்:பாரதித் தமிழ்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்து தர்மம்

காளிதாஸன்

29 நவம்பர் 1917

வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும் அமெரிக் காவிலும் ஹிந்து தர்மத்தைப் பரவும்படி செய்ய வேண்டுமானல் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா! ஸ்வாமி விவேகாநந்தரைப் போலே பத்துப் பேர் இப்போதிருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம். அந்தக் கண்டங்கள் யுத்தமாகிய சுழற் காற்றுக்குள்ளே அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கையிலே, ஹிந்து தர்மத்தை எவன் கவனிப்பான் என்று கூறிச் சிலர் ஆrே:பிக்கலாம். அந்த ஆக்ஷேபம் சரியன்று. சண்டைக் காலந்தான் நமக்கு நல்லது. இந்த ஸ்மயத்திலேதான் மனுஷ்ய அஹங்காரத்தின் சிறு மையும் தெய்வத்தினுடைய மஹிமையும் மனுஷ்ய னுடைய புத்திக்கு நன்றாக விளங்கும். இவ்வுலக இன்பங்களை தர்மத்தினல்ே பெற்றாலொழிய அவை இன்பங்கள்போலே தோன்றிலுைம் துக்கமாகவே முடியும். அவரவர் கர்மத்தின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை யறுப்பான். நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக்