பக்கம்:பாரதித் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பாரதி தமிழ்


ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள் செய்து வாழ்ந்தனன் நீர்ப்பு டுஞ்சிறு புற்புத மாமது நீங்கவே யுளங் குன்றித் தளர்ந்தனன். பாரதியாருக்கு மணமான ஒராண்டிற்குள்ளே சின்னசாமி அய்யர் நோயுற்றுக் காலமானர்.

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது தரணி மீதினி லஞ்சலென் பாரிலர்.

இவ்வாறு பாரதியார் துயருற்றிருக்கும்போது காசிக்கு வரும்படி அவருக்கு அழைப்புக் கிடைத்தது. அவருடைய அத்தை குப்பம்மாள் தம் கணவர் பூரீ கிருஷ்ணசிவளுேடு அது சமயம் காசியில் வசித்து வந்தார். அவர்கள் அழைக்கவே பாரதியார் அங்கு சென்றார். எந்த ஆண்டிலே காசி சென்றார் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. 1901-ல் சென்ற தாக திரு. ஆக்கூர் அனந்தாச்சாரியார் கூறுகிரு.ர். ஆனல் 1902-ல் அவர் எட்டைய புரத்திற்குத் திரும்பி விட்டதாகத் திருமதி செல்லம்மா பாரதி எழுது கிரு.ர். 1898 முதல் 1901 வரை காசியிலிருந்ததாக யோகிசுத்தானந்தர் எழுதுகிறார் (பாரதி விளக்கம்.). ஆகவே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவர் காசியில் வசித்திருக்கலாம். ஆங்கிலத்தோடு ஹிந்தி யும் சமஸ்கிருதமும் படிக்க அவருக்கு அங்கே வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கல்கத்தா பல்கலைக் கழகப் பிரவேசப் பரீட்சைக்குப் படித்து அதில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

வடநாட்டினரைப் போலவே திருத்தமான உச்சரிப்போடு பாரதியார் ஹிந்தியில் பேசுவாராம்.

பாரதியார் தமது பதினெட்டாவது வயது சமயத்திலே காசியில் வாழ்ந்திருக்கிறார். சம்பவங் களும், அநுபவங்களும் உள்ளத்திலே ஆழ்ந்து பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/30&oldid=1539902" இலிருந்து மீள்விக்கப்பட்டது