பக்கம்:பாரதித் தமிழ்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோபந்நா

காளிதாஸன்

20 பிப்பரவரி 1918 பிங்கள மாசி 9

காலை ஒன்பது நாழிகை யிருக்கும். இள வெயில் காய்கிறது. வீதியில் வரிசையாக நிற்கும் தென்னை மரங்களில் கிளிகள் இணையிணையாகப் பறந்து விளையாடுகின்றன. வானெளியாகிய வெள் ளத்தில் புருக் கூட்டங்களும், கொக்கு சபைகளும் தனி ராஜப் பருந்துகளும், நீந்திக் களிக்கின்றன. சிறு குருவிகள் ஊசலாடுகின்றன. காக்கைகள் ஒடிப் பறந்து திரிந்து ஜீவன உத்யோகத்தை மிகவும் சிரத்தையுடன் நடத்தி வருகின்றன. வானமுழுதிலும் ப r க ளி ன் ஒலி நிரம்பிக் கிடந்தது.

அந்த ஸமயத்தில் தெருவிலே ஒரு தென்னை மரத்தில் ஒரு வண்ணன் இரண்டு கழுதைகளைக் கொண்டு கட்டினன். தென்னை மரத்தின் மேலிருந்து மைன பகதி ஆச்சரியமாகக் கூவிக் கொண்டிருந்தது. இதைக் கேட்ட கழுதைகள் தாமும் ஊளையிடத் தொடங்கின. இதைக் கேட்டு வீதி வழியே போய்க் கொண்டிருந்த பாலர் இருவர் மேற்படி கழுதை களின் ஒலியை அனுகரணம் பண்ணித் தாமும் ஊளையிடலாயினர். இதைக் கேட்ட கழுதைகளில் ஒன்றுக்கு மிகவும் ஸ்ந்தோஷமுண்டாய், ஸாதா