பக்கம்:பாரதித் தமிழ்.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்வராஜ்யம்

சக்திதாசன்

5 அக்டோபர் 1918 காலாயுக்தி புரட்டாசி 20

சென்னை ‘ஹிந்து’ பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடிதமொன்றில் ‘அமெரிக்காவும், ஐர்லாந்தும், இந்தியாவும்” என்ற மகுடத்தின் கீழே ஒரு குறிப்பெழுதியிருக்கிரு.ர். அதில் அமெ ரிக்கா ஸ்வாதீனமடைந்த திருநாளாகிய ஜூலை நாலாந் தேதி கொண்டாட்டங்கள் ஆங்கிலேயர்களா லேயே இங்கிலாந்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட செய்தியைக் குறித்துப் பேசு கிரு.ர். (இங்கிலீஷ் ராஜ்யத்தை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெற்று (யுனைடெட் ஸ்டேட்ஸ்) அமெரிக்க ஐக்கி நாடுகள் 1776-ஆம் வருஷம் ஜூலை மாஸம் நாலாந் தேதியன்று விடுதலைக் கொடி நாட்டின. மேற்படி லண்டன் நிருபர் எழுதுகிரு.ர்.

“இன்று ஜூலை நாலாந் தேதியன்று (ஆங்கிலேய ராகிய) நாமெல்லோரும் நம்முடைய அமெரிக்க ஸகோதரருடன் கலந்து ஐக்யநாடுகளின் விடுதலையை ஆவலுடன் கொண்டாடுகிருேம்.’

இன்று ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தைகளே யும், செய்யும் செய்கைகளையும் 142 வருஷங்களுக்கு முன்பு சொல்லியும், செய்துமிருப்பார்களாயின்