பக்கம்:பாரதித் தமிழ்.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


314 பாரதி தமிழ்

தேசத் துரோகிகளென்னும், கலகக்காரரென்றும் சொல்லி மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். இதனைப் பல ஆங்கிலேயர் இப்போது நினைத்திருக்கக் கூட மாட்டார்கள். அதே ஆங்கிலேயரில் சிலர் இக் காலத்தில் விடுதலைபெற நியாயமாகப் போராடும்” வேறு சில ஜாதியார் விஷயத்தில் என்ன மாதிரியான வார்த்தை சொல்லுகிரு.ர்கள்?

இங்கு ஒரு முக்யமான பேதத்தை மேற்படி லண்டன் நிருபர் மறந்துவிட்டார். ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவியால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது.

இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிட ருந்து ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக் கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது.

“உபாயத்தால் ஸாதிக்கக்கூடிய கார்யத்தைப் பராக்கிரமத்தால் ஸாதிக்க முடியாது’ என்று பஞ்ச தந்திரம் கூறுகிறது. மேலும் நமக்கு ஆங்கிலேயர் ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் கொடுத்து விடு வார்கள் என்று நினைப்பதற்குக் காலதேச வர்த்த மானங்கள் மிகவும் அனுகூலமாகவேயிருக்கின்றன.

எங்ஙனமெனில் மந்திரி மிஸ்டர் மான்டேகுவும், ராஜப்ரதிநிதி லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயார் செய்திருக்கும் சீர்திருத்த ஆலோசனைப் புஸ்த கத்தில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். “இந்தியாவின் எதிர்கால நிலை டில்லி நகரத்திலே னும் ஸிம்லாவிலேனும் வைட்ஹாலிலேனும் நிச்ச யிக்கப் படுவதன்று. ப்ரான்ஸ் தேசத்துப் போர்க் களங்களிலே நிச்சயிக்கப்படும்” என்கிறார்கள்,