பக்கம்:பாரதித் தமிழ்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்வராஜ்யம் 315

இங்ஙனம் மந்திரியும் ராஜப்பிரதிநிதியும் கூறு வதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனினும், நேசக் கrயாருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க முடியுமென்று அவர் கள் சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள நேர்கிறது.

இதனிடையே இந்தியாவில் இந்து-மஹமதிய பேதங்களிருப்பதாகக் காட்டி அதினின்றும் இந்தியா வுக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கத் தகாதென்று சொல் லும் ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் முதலிய வெளிநாட்டு, உள்நாட்டு துரோகிகள் எல்லார் வாயிலும் பூரீமான் ஸய்யது ஹசேன் இமாம்-நமது விசேஷ ஜனசபைக் கூட்டத்தின் அதிபதி-மண்ணைக் கொட்டிவிட்டார். “எல்லா வகுப்புகளும் இப்போது கொண்டிருக்கும் ஐக்ய புத்தியையும், எல்லார் நல மும் ஒன்றென்ற கருத்தையும் எதிர்க்க முடியாது” என்று அவர் சொல்லுகிரு.ர்.

மேலும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் மிகவும் அவசியமென்பதை விளக்கிக் காட்டும் பொருட் டாக நீதி நிபுண ஸய்யது ஹலேன் இமாம் ஸ்ாஹப் சொல்லும் பின்வரும் வாக்கியங்களுக்கு ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் என்ன மறுமொழி சொல்லக் கூடும்? ஹஸேன் இமாம் கூறுகின்றார்:

“எல்லாவிதமான அன்னியாதிபத்தியங்களைக் காட்டிலும் ஒரு தேசத்தார் மற்றாெரு தேசத்தார் மீது செலுத்தும் அன்னியாதிபத்தியம் மிகக் கொடி யது என்று மக்காலே சொன்னர். இது மக்காலே காலத்தில் எத்தனை உண்மையோ அத்தனை இக் க்ாலத்திலும் உண்மையே. அவர் வார்த்தை மற்ற தேசங்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அத்தனை இந்தியாவுக்கும் பொருந்தும். அன்ய நுகத்தடியின் கஷ்டத்தை இந்தியா உணர்கின்றதென்பதை மறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/314&oldid=605678" இலிருந்து மீள்விக்கப்பட்டது