பக்கம்:பாரதித் தமிழ்.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரலி சு. கெல்லேயப்பருக்குக் கடிதம் 319

கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங் கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக் கிறேன்.

ஏற்கெனவே பாஞ்சாலி சபதம் (முதற் பாகம்) வெளிப்பட்டிருக்கிறபடியாலும், ப்ரசுரம் செய்பவன் நானன்றி நீயாதலாலும் இதை அச்சிடுமுன் மேற்படி ஒப்பந்த விதியை அனுஸ்ரித்தால் அவசியமில்லை யென்று தோன்றுகிறது.

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை. நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேஹிதர்; தங்கமான மனுஷ்யன். ஆதலால், அநாவசியமான ஆக்ஷேபங் க ற் பி த் து நமது கார்யத்தைத் தடை செய்யக் கூடியவரல்லர். நீயே மேற்படி நூலே அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக.

பாப்பா பாட்டு முதலியன உன்னிடம் இல்லா விட்டால் உடனே அவற்றை மீட்டும் ப்ரசுரம் செய்தல் மிகவும் அவஸரம்.

இவை முதலிய எல்லா விஷயங்களைப்பற்றி உன் னிடம் நேரே பேச விரும்புகிறேன்.

இதன் பொருட்டாக இக் கடிதம் கண்டவுடன் இங்கு நீ நேரே புறப்பட்டு வந்து சேரும்படி வேண்டு கிறேன். பூரீ மா ன் குவளை-க்ருஷ்ணய்யங்கார் முதலிய நம்முடைய நண்பர்களுக்கு என் நமஸ் காரத்தைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். இன்னும் ப்ரசுரம் செய்யவேண்டிய நூல்கள் என் னிடம் பல இருக்கின்றன. நான் இப்போது ப்ரிடிஷ் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் நமது ப்ரசுரங் களுக்கு பணம் கொடுக்கக் கூடிய நண்பர்களும் பலர்