பக்கம்:பாரதித் தமிழ்.pdf/320

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்ப மரம்

(ஒரு சிறிய கதை) ருமான் சி. சுப்பிரமணிய பாரதி

28 gge fr 1919 சித்தார்த்தி ஆனி 7

இளவேனிற்காலத்தில் ஒரு நாள். காலை வேளை யில் நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்துாரம் சுற்றிய பிறகு என் உடம்பில் சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக் குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன். இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

நான் துரங்கிக் கொண்டிருக்கையில், ‘ஏ மனிதா, ஏ மனிதா, எ ழு ந் திரு: எழுந்திரு’ என்று அமானுஷிகமாக ஒலியொன்று கேட்டது. இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணே விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித் தேன். அதாவது விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன்.

விழித்து. “யார் கூப்பிட்டது?’ எ ன் று கேட்டேன்.

பா. த.-21