பக்கம்:பாரதித் தமிழ்.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேப்ப மரம் 323

(உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)

எழுந்து நின்று கொண்டு:-"வேப்பமரமே. உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிதரைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை, அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாத போது மனித பாஷை பேசுவது ஸாத்யப் படாதே? எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர் களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே. அடி நாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிறார் களே. அப்படியிருக்க நீ மனித சரீரமே யில்லாம்ல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?’ என்று கேட்டேன்.

அப்போது வேப்பமரம் சொல்லுகிறது:

கேளாய், மானுடா, மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு. எனக்கு உடம்பெல்லாம் வாய், மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக் கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசிய மென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மர மில்லை. நான் அகஸ்த்ய முனிவரின் சிஷ்யன். தமிழ் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடை lilssol........ y

வேப்பமரம் பின்னுஞ் சொல்லுகிறது:

‘நடந்த கதையை அடியிலிருந்து சொல்லு கிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானகிறது. நான் இள மரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒரு நாள் வஸந்த காலத்தின்போது இராவேளையில் ஆச்சர்ய மான நிலா வீசிக்கொண்டிருந்தது. நான் விழித்