பக்கம்:பாரதித் தமிழ்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேப்ப மரம் 325

இப்போது நீ நிற்குமிடத்திலே - படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர். எனக்கு அந்த ஸ்மயத்தில் அகஸ்த்யருடைய சக்திகளெல்லாம் நன்முகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்தி லிருக்கிருரென்பதை அறியாமல் ஜலக்கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையிலிருக்கிருரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று. அப்போது.அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார்-அந்த மரத்தின் கீழேயுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்லபாம்பு ‘ஹ-ஸ் எ ன் ற சீத்காரம் செய்துகொண்டு அகஸ்தியர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன். ஐயோ; இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமாளுல் தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கி விடுவார்’ என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர் மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பும் அவரை நெருங்கி வந்து அவ ருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. முன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று. அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளி தாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையச் சுற்றிக்கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடி யுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசி னர். புண் உடனே ஆறிப்போய் சாதாரணத்