பக்கம்:பாரதித் தமிழ்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பாரதி தமிழ்

தோலாய்விட்டது. இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதையில்லாமல், ஊமை மரமாய்ப் பிறந்து விட்டோமே என் றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி அவர் காலின்மீது சில மலர்களையும் இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்தி என்னை நோக்கி;

வேப்பமரமே என்று கூப்பிட்டார்.

வேப்பமரம் பின்னுங் கதை சொல்லுகிறது:கேளாய், மா னு டா, கவனத்துடன் கேள், இங்ஙனம் என்ன்ை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னையறியாமால என் கிளைகளிலுள்ள வாய்களி னின்றும், ஏன் முனிவரே?’ என்ற தமிழ்ச் சொற் கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகித மாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகையறிந்து கொண்டேன். வேப்பமரப் பிறவி போய் எனக்கு மனிதப் பிறவி யுண்டாயிற்றென்று தெரிந்து கொண்டேன். உடம்பு மாறவில்லை. உ ட ம் பு மாறினலென்ன, மாருவிட்டாலென்ன? நாம் உடம் பில்லை. நான் ஆத்மா. நான் போதம். நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சித்தம் மாறிப் போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்து விட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றி ருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார். எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல் அவருடைய பாதத்தின் மீது வர்ஷித்தேன். அவர் விகவும் மகிழ்ச்சி பூத்தவராய் ஏ, வேப்ப மரமே, நேற்றிரவு நானும் தாம்ரபர்ணி