பக்கம்:பாரதித் தமிழ்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


332 பாரதி தமிழ்

“எங்கப்பா சங்கரநாதன் கோயில் ஸ்ப்-இன்ஸ் பெக்டர்’ என்று காந்தாமணி சொன்னுள். பார்த்த ஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்த்துக் கொண் டார். அவருக்கு ‘ஸ்ப்-இன்ஸ்பெக்டர்’ என்ற பெயர் பாம்புக்கு இடிபோல். அப்போது காந்தா மணிக்கும் பாட்டிக்குமிடையே பின்வரும் ஸம்பா ஷணை நிகழலாயிற்று.

“நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்?’ என்று பாட்டி கேட்டாள். அப்போது காந்தாமணி சொல் கிருள்:-"எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; பூரீ வைகுண்டத் திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக் குழந்தை இல்லையென்று தீராத மனக் கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணின லன்றாே தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரை யர்க முடித்துக்கொண்டு இந்த அறுதலிப் பிராம ணன், எங்கப்பா அடுத்த மாஸம் மன்னர் கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கல்யாண்ம் பண்ணிக் கொள்ளப் போகிறார். முகூர்த்தமெல்லாம் வைத் தாய் விட்டது’ என்றாள்.

“மன்னர் கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போகிற மாமனருடைய பெயரென்ன?” என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி:-"அவர் பெயர் கோவிந்தராஜய்யங் காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரு பெண்தாளும். கால் முதல் தலைவரை அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிற