பக்கம்:பாரதித் தமிழ்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பாரதி தமிழ்

முழுவதும் போலீஸ் பார்த்தலாரதி அய்யங்கார் மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது. அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தஸ்ாரதி ஐயங்காரையும் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரிச்சியில்லை; ஸ்மார்த்தச்சி. அந்த கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்ஸாரதி அய்யங்காருக் கும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனல் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்ளபீபுக்கும் பல முறை யுத்தங்கள் நடந்தனவென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின் போதுதான் பார்த்தஸாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம் பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப்பட்டதுண்டு. அந்தக் கேள்வியையும் மன தில் வைத்துக் கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீ களின் ஸ்ம்பாஷணையின்போது மேற்படி அய்யங் காரின் முகத்தில் தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின் வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று.

கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாரு மல் இன்னும் தழல் வீசிக்கொண்டிருக்கிறதென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத் திக் காட்ட விரும்புகிருரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகளின் அருகே கூடத் தனக்கு அக் கிழவியின் வடிவே அதிக ரம்யமாகத் தோன்றுகிற தென்றும் உணர்த்த விரும்புகிருரென்றும் தெரிய லாயிற்று. ஆனல் அவருடைய முகக் குறிப்புக் களிலே பாதி பொய் நடிப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/333&oldid=605707" இலிருந்து மீள்விக்கப்பட்டது