பக்கம்:பாரதித் தமிழ்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பாரதி தமிழ்

இவன் பார்வைக்கு மன்மதன் போலிருந்தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான படர்ந்த உச்சிக்குடுமியும் அவனைக் கண்டபோது எனக்கே மோஹமுண்டாயிற்று.

அந்த மலையாளி கிணற்றருகே வந்துட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட் டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒருமுறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு நழுவ விட்டுவிட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து;.... “ஐயோ; நான் என்ன செய்வே னம்மா? குடம் ஆறங்குல ஆழம் அமுங்கிப் போய் விட்டதே? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே?’ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

மார்புத் துணியை நெகிழவிட்டாள்; பொதியை மலைத் தொடரை நோக்கிள்ை.

இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவ ளென்பதை நான் தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டேன், பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி ஐயங் கார் பூர்வம் நெடுநாள்மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தாரென்றும் அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தா மணிக்கும் அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது நாளுக்குநாள் வளர்ந்து வருகிறதென்றும் வெளிப்பட்டது. ஸ்ப்-இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்துக் காந்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும் கூந்தலாபுரம் ஜமீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/335&oldid=605710" இலிருந்து மீள்விக்கப்பட்டது