பக்கம்:பாரதித் தமிழ்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்தாமணி 337

திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம் பாடு பூரீநிவாஸாசார்யர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்துவிட்டார். அந்த பூரீநிவாலாசார் யருடன் வாழக் காந்தாமணிக்கு சம்மதமில்லை. இந்தச் செய்தியெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரிய வந்தது.

அன்று கிணற்றங்கரையில் என் கண் முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன். காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு, எங்கம்மா வைவாளே, நான் என்ன சொல்வேனம்மா?’ எ ன் று அழுது கொண்டே போளுள். ஆனல் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. நேரே, அந்த ஊருக்கு மேற்கேயுள்ள நதிக்குப் போளுள். தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங்கரையை நோக்கிச்சென்றான். இதற்குள்ளே எனக்கு ஸ்ந்தியாவந்தன காலம் நெடுந்துாரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று:- கேட்டீர்களோ, விஷயத்தை; வெகு ஆச்சர்யம்! வெகு ஆச்சர்யம்’ என்று கூக்குர லிட்டார்.

“என்ன ஒய் ஆச்சர்யம்? நடந்ததைச் சொல்லி விட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் செளகர்யமாக இருக்கும்’ என்றேன். ‘சத்திரத்திலே ஸ்ப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணேயுங் கூட்டிக் கொண்டு வந்தார். அவ ருடைய மகள். அந்தக் குட்டி வெகு அழகாம்.

பா. த.-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/336&oldid=605711" இலிருந்து மீள்விக்கப்பட்டது