பக்கம்:பாரதித் தமிழ்.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புகள்

சக்திதாஸன்

21 gಐx ಎrf L 920 ரெளத்திரி தை 9

எளிதாக ஸம்ஸ்க்ருதம் படிக்கும் வழி

1921 ஜனவரி 11-ஆந் தேதி சுதேசமித்திரனில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்ற மகுடத்தின் கீழே எழுதப்பட்டிருந்த குறிப்புக்களில் “இந்தியாவுக் கொரு பொதுப் பாஷை’ என்ற தலைப்பின் கீழுள்ள குறிப்பைப் பார்த்துவிட்டு, நம் சந்தாதார் ஒருவர்; “(1) பண்டாரகரால் வெளியிடப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புஸ்தகம், (2) பஞ்ச தந்திரம்-தமிழ் மொழிபெயர்ப்புடன்-ஆகிய இவ விரண்டும் எங்கே கிடைக்கும்”, என்று நம்மைக் கேட்கிறார், வடமொழியும் இங்கிலீஷாம் கலந்து பண்டாரகர் வெளிப்படுத்தியிருக்கும் மூல நூல் சென்னையில் பெரிய பாடசாலைப் புஸ்தக வியாபாரி எவரிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு. திருவண்ணுமலே டேனிஷ் மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதருக்கெழுதினால் கிடைக்குமென்று தெரிகிறது. பஞ்ச தந்திரம், வட மொழியிலுள்ள மூல நூலுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை யாவராலும் செய்யப் படவில்லையென்பதை மிக வருத்தத்துடன் தெரி