பக்கம்:பாரதித் தமிழ்.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பாரதி தமிழ்

வித்துக்கொள்கிருேம். தாண்டவராய முதலியார் எழுதியிருக்கும் தமிழ்ப் பஞ்ச தந்த்ரம் ஸம்ஸ்க்ருதத் திலிருந்து நேராக மொழி பெயர்க்கப்பட்டதன்று. மஹாராஷ்ட்ர பாஷையில் பஞ்ச தந்திரக் கதைகளை மட்டும் ஒருவாறு தொகுத்திருந்ததொரு நூலி னின்றும் கதைகளைத் திரட்டித் தமிழில் அந்த முதலியார் வெளிப்படுத்திவிட்டாரென்று தெரிய வருகிறது. எனவே பூமண்டல முழுமையிலும் தனக் கொரு நிகரில்லாத ராஜ்யநீதி சாஸ்த்ரமும், ஹிந்துக்களின் அறிவு நுட்பத்துக்குப் பெரும் புகழுமாகி விளங்கும் ஸம்ஸ்க்ருத பஞ்சதந்திரமும், தமிழில் இயற்கையாக மொழி பெயர்க்கப்படவில்லை. அதன் அழகான நீதி வசனங்களில் பெரும்பான்மை தமிழ் மொழி பெயர்ப்பிலேயில்லை. மேலும் தமிழ்ப் பஞ்ச தந்திரத்தைப் படித்தால், இஃதொரு ஸாமான்யமான கதைப் புஸ்தகமென்று தோன்று கிறதேயன்றி, உலகத்து ராஜ்ய தந்த்ர சாஸ்த்ரங் களுள்ளே இது சிரோமணியென்பது துலங்கவில்லை. இப்போது தமிழ் நாட்டில் புதியதோர் அறிவுக் கிளர்ச்சி எழுச்சி கொண்டிருப்பதினின்றும், இனி, விரைவிலே அந்நூல் தமிழில் நேராக மொழி பெயர்க்கப்படு மென்பது நிச்சயந்தான். ஆயினும் தற்காலத்தில் அவ்வித மொழி பெயர்ப்பில்லை. எனி னும், இதுபற்றி மனஞ்சலிக்க வேண்டாம். அன் றைக் குறிப்பில் எழுதியிருந்தபடி, முதல் நூல், (பஞ்ச தந்த்ரம்) வடமொழியில் மிக மிக எளிய, மிக ஸ்ரளமான, மிகத் தெளிந்த, ஸாமான்ய நடையில் அமைந்திருக்கிறது. அதன் பொருள் எத்தனை அபூர்வமாகவும், ஆழமாகவும், நுட்பமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்திருக்கிறதோ அத்தனை எளிமையாகவும் ஸாதாரணமாகவும் அதன் வாக்ய நடை அமைந்துள்ளது. எனவே, அன்று தெரிவித்த படி, பண்டாரகர் முதற்பாட புஸ்தகத்தையும்,