பக்கம்:பாரதித் தமிழ்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பாரதி தமிழ்

கொண்டால் மாத்திரமே மேற்கூறிய தொழிற் கrத் தலைவர்கள் நமக்குத் துணை புரிவார்களென் றும், நம்மவர் ஒத்துழையாமையைக் கைப்பற்றினல் பிறகு, அவர்களுடைய உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லையென்றும் பூரீமான் நிஹள ஸிங் சொல்லுகிறார். ஆனல் மேற்கூறிய தலைவர்கள் சேர்ந்த பகுதியைத் தவிர ஆங்கிலத் தொழிற் ககதிக் குள்ளேயே மற்றாெரு பகுதியிருக்கிறது. அந்த மற் றொரு பகுதியார், பார்லிமெண்ட் அனுஷ்டானங் களைக் கடைப்பிடித்தொழுகி, அவற்றின் மூலமாகத் தொழிற் ககதியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளாமல், பலாத்காரமான புரட்சி முறையாலே தொழிலரசு ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்க முடையவர்கள். இந்தியா ஒத்துழையாமையைக் கைக்கொள்ளுமிடத்தே, பிற்கூறிய தொழிற் பகுதி யினரின் ஆதரவை மட்டுமே எதிர்பார்க்கலாமென்று பூரீநிஹள ஸிங் தெரிவிக்கிறார், இங்ஙனம் பூணிநிகள லிங் வரையறுத்துப் பாகுப்ாடு செய்திருப்பதில் ஒரு சிறிதுண்மையிருத்தல் மெய்யே யெனினும், இது முற்றிலும் சரியென்று நாம் நினைக்க இடமில்லை. ஏனென்றால், ஒத்துழையாமை முறை பலாத்காரச் செயல்களை மறுக்குமியல்புடையது; புரட்சி மார்க் கத்தைச் சார்ந்ததன்று. எனவே, ஆங்கிலத் தொழி லாளிகளில் மனுஷ்ய ஜாதியின் ஸ்மத்வத்தையும், ஸ்வாதீனத்தையும் வேண்டும் இயல்புடையோர், பலாத்கார முறைகளை வேண்டாத ஸமாதானப் பிரியராகிய போதிலும், இந்தியர் ஒத்துழையாமை யைக் கைக் கொண்டது பற்றி மனவருத்த மெய்த மாட்டார்கள். தம்மால் இந்தியாவுக்குச் செய்யக் கூடிய உதவியை அவர்கள் எப்போதும் செய்வார்கள். திருஷ்டாந்தமாகக் கர்னல் வெட்ஜ்வுட் தொழிற் ககதித் தலைவருள்ளே புரட்சி வகுப்பைச் சேராதவ ரென்றே கொள்ள வேண்டும். மேலும், இவர் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/341&oldid=605720" இலிருந்து மீள்விக்கப்பட்டது