பக்கம்:பாரதித் தமிழ்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புகள் 343

நாட்டில் எழுந்திருக்கும் ஒத்துழையாமைக் கிளர்ச் சியில் அபிமானமில்லாதவர். புதிய சட்ட சபைகளை நாம் உபயோகப் படுத்தியே விடுதலைக்கு வழி தேட வேண்டுமென்ற கருத்துடையவர்.

அப்படியிருந்தும், காங்கிரஸ் ஸ்பையில் இவரை நோக்கி, ரீமான் ஸத்தியமூர்த்தி அய்யர்-'ருஷி யாவுக்கும், ஐர்லாந்துக்கும் பரிந்து பேசும் தாங்கள் இந்தியா ஒத்துழையாமையைக் கைக் கொண்ட போதிலும் ப்ார்லிமெண்டில் எங்கள் சார்பாக நின்று போராட மாட்டீர்களோ?’ என்று கேட்டபோது, என்ன மறுமொழி சொன்னர்?

“இந்தியா ஒத்துழையாமையைக் கைக்கொண் டாலும், வேறென்ன செய்தாலும் நான் இந்தியர் விடுதலை பெறும் பொருட்டு வேலை செய்வதை நிறுத்தமாட்டேன்’ என்று விடையளித்தார்.

தொழிற் கrதியில் புரட்சிக்காரரல்லாதா ரிடையேயும் இந்தக் கர்னல் வெட்ஜ்வுட் போன் ருேர் பலர் இருக்கக் கூடுமென்றே எதிர்பார்க்கிருேம்.

இதன் பெயரென்ன?

லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில், ஸர் வாலன்டைன் கிரால் பின்வருமாறு பரிதபிக்கிறார்:

‘பத்து வருஷங்களின் முன்னே, டில்லி நகரத் துக்கு வெளியே, இந்தியாவில், பண்டு இஸ்லாமிய ஆதிக்கமிருந்ததற்குச் சிறந்ததொரு சின்னமாகிய குதுப்மினர் என்ற கோரியின் கீழே ஒரு நாள் காலை யில் சில மஹமதிய நண்பர்கள் என்ைேடு ஸம்பா ஷணை செய்துகொண்டிருந்தனர். இனி இந்திய ஸ்வராஜ்யமும், ஹிந்து ஆதிக்கமும் நேர்ந்தால் இந்திய மஹமதியரின் கதி என்ன ஆகுமோ என் றெண்ணி அவர்கள் பெருமூச்செறிந்தார்கள். இன் றைக்கு அவர்களில் சிலர் ரீமான் காந்தியின் பரம