பக்கம்:பாரதித் தமிழ்.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


344 பாரதி தமிழ்

சிஷ்யராக இருக்கிறார்கள். இன்றைக்கு எங்கு பார்த் தாலும் ‘ஹிந்து முஸ்லிம் கீ ஜய்’ என்ற சத்தம் பிறந்துவிட்டது. மஹமதியரின் மசூதிகளுக்குள் ஹிந்துக்கள் உபன்யாஸ்கராய் முஸ்லிம்களுக்கு ஸ்வ ராஜ்ய உபதேசம் பண்ணுகிறார்கள். டில்லி நகரத் தில், சில தினங்களின் முன்பு உலேமாக்களின் ஸர்வ பாரத ஸங்கம் நடைபெற்றபோது அங்கு பூரீ காந்தி விருந்தாளியாகச் சென்றிருந்தார். இதைக் காட் டிலும் வினேதமான செய்தி ஹிந்துக்களின் கொள் கைக் கிணங்கி முஸ்ல்மான்கள் முக்யமான உத்ஸவ காலங்களில் பசுக்களை விட்டு ஆடுகளைக் கொல்ல உடம்பட்டதாகும். ஆளுல் இப்படிச் செய்யலா மென்று அக்பர் சக்கரவர்த்தி விதித்திருக்கிரு.ர்.”

என்று மேன்மேலும் ஸர் வாலன்டைன் தமது மனவருத்தத்தை விஸ்தரித் தெழுதிக்கொண்டு போகிரு.ர். பொருமையும் வயிற்றெரிச்சலும் இந்த வார்த்தைகளில் கொழுந்து விட்டெரிகின்றன். இப்படிப்பட்ட மனோபாவ விலாஸங்களை இங்கிலாந் தில் ப்ரகடனம் செய்வதனல் யாருக்கென்ன பயன் விளையுமென்று டைம்ஸ்’ பத்திரிகை அதிகாரிகள் ಥಿಆfಹಣಿ! என்பதை நம்மால் ஊஹிக்க முடிய

6l)άσι),

வரம்பு கடந்து விட்டமை

ஆனல் தேசீயப் பாடசாலைகளில் ஹிந்துமத கிரந்தங்களுக்குத் தக்கபடி கல்வி கற்பிக்கப்படுமாத லால் அப்பாடசாலைகள் முஸ்ல்மான்களுக்குப் பயன் பட மாட்டாவென்று ஸர் வாலன்டைன் சொல்லும் போதுதான், அவர் நம்பிக்கையின் வரம்புக்கு வெளியே பஹிரங்கமாக வந்து நிற்கிரு.ர். ஏனெனில் தேசியப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு முஸ்லிம் மத நூல்களே உபதேசிக்கப்படுமென்பது ஸ்கலருக்குந் தெரிந்த விஷயம்.