பக்கம்:பாரதித் தமிழ்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள்

காளிதாஸன்

15 நவம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 1 ஐர்லாந்து

ஜர்லாந்து விஷயமாகவும், உள்நாட்டுத் தொழி லாளர் கிளர்ச்சி விஷயமாகவும் இங்கிலாந்து தேசத் தாரின் மனம் மிகவும் குழம்பிப் போயிருக்கிறதென்று லண்டன் டைம்ஸ்’ முதலிய ஆங்கிலப் பத்திரிகை களைப் பார்த்தால் மிகத் தெளிவாக விளங்குகிறது. முக்யமாக, ஐர்லாந்தில் அதிகாரிகள் செய்யும் ‘எதிர்ச் செயல்கள்’ உலக முழுதிலும் ஐரிஷ் ஆட் சிக்குப் பேரவமானம் விளைக்கக்கூடிய விஷயமாத லால், அதன் ஸம்பந்தமாக ஆங்கிலேயர் மனதில் மிகுந்த அதிர்ச்சி யுண்டாயிருக்கிறது. போலிஸா ரையும் ராணுவத்தாரையும் எவ்விதத்திலேனும் கஷ்டப்படுத்தியவர்கள் அல்லது கஷ்டப்படுத்தக் கூடியவர்களாகிய பளiன்பீன்” ககதியாரை மாத் திரமே அதிகாரிகள் அழிக்கவில்லை. பல மாஸங்க ளாகவே, இஷ்டமான வீடுகளில் பிரவேசிப்பதும், வீட்டாரைச் சுட்டுக் கொல்வதும், வீடுகளையும் பண்ணைகளையும் கிராமங்களையும் கொளுத்துவதுமாக விளையாடிக்கொண்டு வருகிறார்களென்று சொல்லப் படுகிறது. இந்த நிலைமையிலே கொண்டு சேர்த்த தாகிய ராஜதந்த்ர முறைமைக்கு லாய்ட் ஜ்யார்ஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/345&oldid=605725" இலிருந்து மீள்விக்கப்பட்டது