பக்கம்:பாரதித் தமிழ்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள் 349

நி லை ைம க் கு வந்துவிட்டபடியால் அவற்றால் துருக்கியை வற்புறுத்த முடியவில்லை. ஆனல், “லண்டன் உடம்பாட்டை நாங்களன்றாே கூட இருந்து முடித்து வைத்தோம்? அப்படியிருக்க அவ் வுடம்பாட்டுக்கு மாருக அட்ரியா நோபிள் துருக்கி வசத்திலிருப்பதை நாங்கள் அங்கீகாரம் செய்ய மாட்டோம்” என்று ஆங்கில மந்திரிகள் சொன் ஞர்கள். அதற்கு அன்வர்.பாஷா:-"தங்கள் இஷ்டப் படி என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளலாம். ஆல்ை அட்ரியா நோபிளைக் கொடுக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. துருக்கிக்கு அட்ரியா நோபிள் மிஞ்சிற்று. அதுபோல் இப்போது ஆசியா மைனரிலுள்ள அனடோலியாவின் ராஜதானியாகிய அங்கோரா நகரத்தில் கமால் பாஷா தேசீயக் கrதிப் படைகளையும், தக்க உபபலங் களையும் வைத்துக்கொண்டு கான்ஸ்டாண்டி நோபிள் நகரத்திலுள்ள துருக்கிய அதிகாரிகளிடம் த்ரேஸ், ஸ்மர்ளு மாகாணங்களை இழந்துவிடாமல் இருக்கும் படி வற்புறுத்தி வருகிறார். இப்போது ஸ்ெவர் உடம் பாட்டை உறுதி செய்யுமாறு நேசக் கrயார் வற்புறுத்தியதற்கு உத்தரமாகத் துருக்கி கவர் மெண்டார் அவ்விஷயம் இப்போது அ த் த னை அவஸரமில்லை யென்று கமால் பாஷாவின் கூட்டத் தாரை ஸமாதானப்படுத்தும் பொருட்டாக அதைச் சற்று மெதுவாகவேகவனிக்கும்படி நேர்கிறதென்றும் தெரிவித்திருக்கிரு.ர்கள். நே ச க் கrதியாருக்குள் ளேயே ஸமாதான நிபந்தனைகளைப் பற்றிய பூர்ண மனவொற்றுமை யில்லாமலிருப்பதை யறிந்தே துருக்கிய அதிகாரிகளுக்கு இங்ஙனம் சொல்ல தைர்யம் ஏற்பட்டிருக்கக் கூடுமென்று நினைக்கிருேம். ஜெர்மனி விஷயத்திலேயே பிரான்ஸுக்கும் இங்கி லாந்துக்கும் மேன்மேலும் அபிப்பிராய பேதங்கள் தோன்றி வருகின்றன. அமெரிக்காவோ சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/348&oldid=605730" இலிருந்து மீள்விக்கப்பட்டது