பக்கம்:பாரதித் தமிழ்.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பாரதி தமிழ்

வேண்டியதில்லை; இங்கிலாந்தினிடம் எ ன க் கு விரோதம் கிடையாது’ என்று அமெரிக்காவின் புதிய ஜனதிபதியாக நியமனம் பெற்றிருக்கும் ார்டிங் என்பவர் சொல்லுகிரு.ர். நம்முடைய பிரான ஸ்நேஹிதனக உயிர்த்துணையாக இருந்த ஒருவன் இப்போது நமக்கும் தனக்கும் விரோத மில்லை யென்று சொல்ல நேர்ந்தால் முன் இருந்த ஸ்நேஹ நிலை எத்தனை தூரம் குறைந்து போய்விட்ட தென்பது சொல்லாமலே விளங்கும். இத்தாலியோ மிகவும் அபாயகரமான உள்நாட்டுக் குழப்பத்தில் அழுந்திக் கிடக்கிறது. இந்த நிலையில் தாமேன் தமது கழுத்திலே அவசரமாகச் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று துருக்கி நினைத்தே இங்ஙனம் வாயிதா போடுகிறதென்று தோன்று கிறது. ஆனால் இங்ஙனம் துருக்கி கொடுத்த உத்த ரத்தில் நேசக் ககதியாருக்குக் கோபமுண்டாய் அவர்கள் இதுவரை துருக்கி ராஜாங்கப் பொக்கிஷத் துக்குச் செய்துகொண்டு வந்த பண உதவியைக் குறைத்துவிடப் போகிறார்களென்றும் அதன் மேலும் துருக்கி சரிப்பட்டு வராவிட்டால் இறுதிச் சீட்டுப் பிறப்பிக்க நேருமென்றும் நேற்றுக் கிடைத்த ராய்ட்டர் தந்தியொன்று சொல்லுகிறது. இத னின்றும், துருக்கி மந்திரிகள் என்ன விதமான செய் கையை மேற்கொள்வார்களென்பது தெரியவில்லை.

ஆனால், நேசக் ககதியாரின் இறுதிச் சீட்டு (எங்கள் வார்த்தையை அங்கீகாரம் செய்யா விட்டால் யுத்தந் தொடங்குவோமென்ற சீட்டு) துருக்கியரை நடு நடுங்கச் செய்துவிடுமென்று தோன்றவில்லை.

ஸர்வதேச ஸங்கம் நேசக் ககதியாரால் மிகவும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்டு வரும் ‘ஸர்வதேச ஸங்கம்’ செத்துப்