பக்கம்:பாரதித் தமிழ்.pdf/350

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள் 35}

போய்விட்டதென்று அமெரிக்காவின் புதிய ஜனதி பதி மிஸ்டர் ஹார்டிங் சொல்லியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், அநேகமாகப் பெரும் பகுதி, ஜனதிபதி வில்ஸனுடைய வேண்டுதல்களை முன்னிட்டே இந்த ஸங்கம் அமைக்கப்பட்டது. இங்ஙனம் அமெரிக் காவின் முயற்சியால் ஏற்பட்ட இந்த ஸங்கத்தை இப்போது அமெரிக்காவே சாபமிடுதல், காலத்தின் ம்ாறுபடும் குணத்தையும், அந்த ஸங்கத்தின் மாற்ற முடியாத துர்க்குணத்தையும் ஒருங்கே விளக்குகிறது. நிறைவேற்றமுடியாத, நிறைவேற்ற வழியில்லாத பல பல தீர்மானங்களில் பொழுது செலவிட்டுக்கொண் டிருக்கும் அந்த ஸங்கத்தை அமெரிக்கா இனி ஒரு சிறிதேனும் பொருட்படுத்தப் போவதில்லையென்பது மேலே காட்டிய மிஸ்டர் ஹார்டிங்கின் வாக்கி லிருந்து நன்கு விளங்குகிறது. ஸமீப காலத்தில் ஐரோப்பாவில் ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் நடந்த திரவிய ஸங்கத்தின் முன்பு ஒரு அமெரிக்க ராஜ தந்திரி பேசுகையில்:-"வேலை செய்ய மனமில்லாத நாடுகளுக்கு ஆஹாரம் கொடுக்கமாட்டோம்; ஸ்மா தானம் செய்துகொள்ள மனமில்லாத ராஜ்யங் களுக்குப் பணம் கடன் கொடுக்கமாட்டோம். இதுவே அமெரிக்காவின் நியாயமான கொள்கை’ என்று சொன்னர். இதைக் குறித்துப் பேசுமிடத்தே, ‘நியூ இந்தியா’ பத்திரிகை சொல்லுகிறது:-"இங்கி ல்ாந்தில் ஒரு பொது எலெக்ஷன் நடந்து அதி னின்றும் உதார குணமுடையவர்கள் அதிகாரம் பெற்று அதனல் ருஷியாவுடன் ஸமாதானமும், ஐர்லாந்துக்கு ஸமாதான வாழ்க்கையும் ஏற்படு ம்ாயின், பிறகு உலகத்து தேசங்களில் மிகச் செல்வ முடையதாகிய அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வுக்கு நிறையப் பணமும் உணவும் வர இடமுண் ட்ாகும்’ என்கிறது. இதை நோக்குமிடத்து அமெ ரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கே, போதிய அளவு