பக்கம்:பாரதித் தமிழ்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாரதி தமிழ்

படுத்தி ஆள முடியுமென்று நம்புவதை எண்ணு மிடத்தே பெரு நகைப்பும் தோன்றுகின்றன. இரும் புருளையா, நம் இஷ்டமான வரை நமது காலடியிலே போட்டிருப்பதற்கு மனிதர் கூட்டமன்றாே? உலக மெங்கும் ஸ்மத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக்கொண்டிருக்கையிலே ஒரு கூட்டத் தார் மற்றாெரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸ்ாத்யப்படும்?

குடியேற்ற நாடுகளைப் போன்ற ஸ்தானம் ஐர் லாந்துக்குக் கொடுத்தால் உடனே மிகவும் எளிதாக, ஆறு லக்ஷத்துக்கு மேல் ஏழு லக்ஷம் வரை கட்டாய ராணுவ ஸேவகம் விதித்து ஐர்லாந்தியர் பெரிய ஸேனை அமைத்துக் கொள்வர்ர்களென்றும், அதி னின்றும் இங்கிலாந்திலும் கட்டாய ராணுவ ஸேவகம் விதிக்க நேருமென்பதைத் தொழிற் கrதியார் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எச்சரித்தார். இதில், மிகவும் ரஸமான உபகதை யொன்று கிளைக்கிறது. அதாவது, கட்டாய ஸேவகம் வருமென்று பய முறுத்துவதில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தொழிற் கrயாரை மட்டும் பெயர் குறிப்பிட்டுப் பேசியதன் நியாயமென்ன? ஐர்லாந்துக்கு விடுதலை வேண்டு மென்பதில் அனுதாப முடையோர், இங்கிலாந்தில் தொழிற் ககதியாரிடையே மாத்திரந்தான இருக் கிறார்கள்? மற்றக் கrதியாரிடையே கிடையாதா? திருஷ்டாந்தம்ாக, ஸர்க்கார் உத்யோகம் கிடைக்கும் வரை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே, ஐர்லாந்தின் விடுதலைக்காக மனமுருகிக் கண்ணிர் விட்டுக்கொண் டிருக்கவில்லையா? எனவே, தொழிற் ககதியாரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டதன் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/357&oldid=605744" இலிருந்து மீள்விக்கப்பட்டது