பக்கம்:பாரதித் தமிழ்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸத் திரட்டு 359

யாதென்றால், கட்டாய ராணுவ ஸேவகம் சட்ட மாகும் பக்டித்தில் அது மற்ற திரவிய வந்தர், வியா பாரிகள், உபாத்தியாயர், ம்ந்திரிகள் முதலிய வகுப் பினரைத் தீண்டுவதைக் காட்டிலும் ஏழைத் தொழி லாளிகளையே அதிகமாகத் தீண்டுமென்ற விஷயம் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் மனதிலிருந்து, அது அவரை மீறியே, வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், அவர் நாவிற்கு வந்துவிட்டது. இது நிற்க, ஐர்லாந்தின் விஷயமாக மந்திரி லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லும் விஷயங்களை மீட்டும் கவ னிப்போம்.

மேலும், ஐர்ல்ாந்திலேயே, (ப்ராடஸ்டெண்ட்) வர்க்கத்தாரின் தொகையும் செல்வாக்கும் மிகுதிப் பட்டதுவும், இங்கிலீஷ் ஆட்சிக்குச் சார்பாக நின்று பொது ஐரிஷ் விடுதலையை எதிர்ப்பதுவுமாகிய அல்ஸ்டர் மாகாணத்தை அதன் ஸம்மதத்துக்கு மாருக எந்தப் பார்லிமெண்டுக்கும் (அதாவது, ஐரிஷ் பார்லிமெண்டுக்கு) உட்படுத்துவதாக உத் தேசங் கிடையாதென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அழுத்திக் கூறினர். அல்ஸ்டர் மாகாணத் துக்குத் தனிப் பார்லிமெண்ட் கொடுப்பதே, ஒற்று மையை நிலை நிறுத்துவதற்குத் தக்க உபாயமென்று தெரிவித்தார். எந்த ஒற்றுமையை? ஐரிஷ் ஒற்று மையையா ஒரு தேசத்துக்கு இரண்டு பார்லி மெண்ட் கொடுத்து, அந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவது விநோதமான வழிதான். லண்டனில் ஒரு பார்லிமெண்ட், மாஞ்ச்ெஸ்டரில் ஒரு பார்லி மெண்ட் வைத்து இங்கிலீஷ் ஒற்றுமையை அதிகப் படுத்தலாமென்ற யோசனையை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அங்கீகாரம் செய்வாரா? ஐரிஷ் சுங்கத் தீர்வையும் வருமான வரியும் ப்ரிடிஷ் கவர்ன்மெண் டாரின் ஆதிக்கத்தின் கீழேதான் வைத்துக்கொள்ளப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/358&oldid=605745" இலிருந்து மீள்விக்கப்பட்டது