பக்கம்:பாரதித் தமிழ்.pdf/359

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பாரதி தமிழ்

போகிறார்களாம். அதுவும் இன்றியமையாததுதா னென்பதற்கு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஏதேதோ நொண்டி முகாந்தரம் சொல்லுகிரு.ர்.

இந்தக் கொள்கைகளுடனே இவர்கள் செய்யப் போகிற ஸ்வராஜ்யச் சட்டத்தை ஐர்லாந்து வாளிகள் தடி முனையாலேகூடத் தீண்டமாம். டார்கள். இதை ஐர்லாந்தில் யாரும் சிறிதேனும் அங்கீகாரம் செய்துகொள்ள மாட்டார்களென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே அங்கீகரிக்கிறார், அங்ஙனம் அவர் அங்கீகாரம் புரிந்தும், அவரும் அவ ருடைய கூட்டத்தாரும் பார்லிமெண்டில் ஸ்வராஜ்ய மசோதா வொன்றைக் கொண்டு விட்டுக்கொண்டு, முதல் வாதம், இரண்டாம் வாதம் முதலிய விளை யாட்டுகளில் ஏன் வீணுக நேரத்தைச் செலவிடு கிறார்களென்ற விஷயம் எனக்கர்த்தமாகவில்லை. ஒரு வ்ேளை ஒரு நிஷ்ப்ர்யோஜனச் சட்டத்தை மிகவும் படாடோபங்களுடன் செய்து முடித்துக் கையில் வைத்துக்கொண்டே:-"நாங்களென்ன செய்வோம்? ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கப் போளுேம். அவர்கள் வாங்கிக்கொள்ள மறுக்கிரு.ர்கள். எனவே, எங்கள் பொறுப்புக் கழிந்தது’ என்று சொல்லித் தங்கள் மனஸாrதிக்கும் அமெரிக்கர் முதலியவர் களின் கூக்குரலுக்கும் ஒரு கழிப்புக் கழித்து விடலாமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜும் அவ ருடைய நண்பர்களும் நினைப்பதாகத் தோன்று கிறது.

ஆனால், இங்ஙனம் நாடகம் காட்டுவதிலிருந்து ஐர்லாந்து வாளிகள் ஸ்மாதான மெய்த மாட்டார்க ளென்பதையும், ஐர்லாந்தில் ஸமாதான மேற்படும் வரை, இங்கிலாந்திற்கு ஸமாதானம் ஏற்பட வழி யில்லை யென்பதையும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒருங்கே மறந்துவிட்டது பற்றி வருத்தப்படுகிறேன.