பக்கம்:பாரதித் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36. பாரதி தமிழ்

கெர்டுக்க வேண்டுமென்றும் எங்களுக்குள் முடிவு செய்து கொண்டோம். சுமார் நூறு பிரதிநிதிகளைக் கூட்டிக்கொண்டு வருவதாகத் திலகருக்குத் தந்தி கொடுத்தோம்.’

பாரதியார், வ. உ. சி. முதலியோர் மிகுந்த உற்சாகத்தோடு, சூரத் போய்ச் சேர்ந்தார்கள். 1907 டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் மிதவாதிகளின் விருப்பம் போல நடைபெறவில்லை. ர்ர்ஷ்பிகாரிகோஷைத் தலைவரர்க்ப் பிரேரேபணை செய்தது முதல் ஒரே குழப்பந்தான். அடுத்த நாள் வரை நடவடிக்கைகளைத் தள்ளி வைத்தார்கள். அடுத்த நாள் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. திலகர் தமக்குப் பேச உரிமை உண்டென்று தலைவர் அநுமதியை எதிர்பார்க்காமல் மேடைமீதேறினர். ஆரவாரம்.ந்ாற்காலி வீச்சு, செருப்பு வீச்சு, தடியடி என்றிப்படிக் காங்கிரஸ் முடிந்தது.

குழப்பத்தில் முடிந்தாலும் சூரத் காங்கிரசால் நன்மை ஏற்படாமலில்லை. திலகர் கட்சியிலும், அவர் க்ொள்கைகளிலும் பாரதியாருக்குப் பற்று மிகுந்தது. திலகரைப் போற்றியும், நிதானக் கட்சியாரை நையாண்டி செய்தும் பாரதியார் பாடல்கள் எழுதலானர்.

சென்னை திரும்பிய பிறகு அவர் இன்னும் தீவிர மாக இந்தியாவில் எழுதத் தொடங்கினர். “பாரதி யாரின் இத்தியா பத்திரிகைச் சட்ட வரம்பை மீறி நெருப்பு மழை பொழியத் தொடங்கிற்று’ என்று எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு குறிப்பிடுகிரு.ர்.

அரசாங்கம் சும்மா இருக்குமா ? இந்தியாவின் மீது தனது கண் போட்லாயிற்று. அப்பத்திரிகை வெளியாவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய உத்தரவும் பிறந்தது. இந்தியாவின் ஆசிரிய