பக்கம்:பாரதித் தமிழ்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாரும்

ருமான் சி. சுப்பிரமணிய பாரதி

30 நவம்பர் 1920 ரெனத்திரி கார்த்திகை 16

வடக்கே, பூரீ காசியினின்றும், தெற்கே தென் காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத் தன. அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று ‘பஹிரங்கக் கடிதம்.” மற்றது. ஸாதாரணக் கடிதம். ஆனல் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக் கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையி லுள்ள வேறு சில நண்பர்கள் என்னிடம் நேராகவும் கேட்டனர். இந்த நண்பர்களுக் கெல்லாம் இங்கு பொதுவாக மறு மொழி யெழுதிவிடுதல் பொருந்து மென்றும், அவர்களுக்கு இஃது திருப்தி தருமென்றும் நினைக்கிறேன். இவர்களெல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வியின் சுருக்கம் பின்வருமாறு:

‘ஒத்துழையாமை விஷயத்தில் உம்முடைய முடிவான கொள்கை யாது? சுதேசமித்திரன் பத்திரிகை ஒத்துழையாமையை பகிரங்கமாகவும் முடிவாகவும் எதிர்க்காவிடினும், அதில் உள்ளுர