பக்கம்:பாரதித் தமிழ்.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும் 367

யெல்லாம் பிடித்துக்கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தி யோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன், அதனல் குறிப்பிட்ட பயனெய்திவிடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.

என்னுடைய சொந்த அபிப்பிராயப்படி, ஸ்வ தேசியக் கொள்கைகளை மேன்மேலும் தெளிவாக வும், உறுதியாகவும், ஜனங்களுக்குள்ளே ப்ரசாரம் புரிவதும், ராஜரீகச் சதுரங்க விளையாட்டில், ஸ்மா தானமாகவே, எதிரி கலங்கும்படியானதோர் ஆட்ட மாடி, ஸரியான ஸமயத்தில் ஸ்வராஜ்யத்தைக் கட்டி யெடுத்துக் கொள்ள முயற்சி புரிவதுமே-சரித்திர ஸ்ம்மதமான உபாயங்களாகும். இந்த முறையில் ஜனங்கள் சட்டத்தை யுடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சயத்துக் கிட மில்லாமலே வேலை செய்ய முடியும். ஏனைய முறை கள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதி யிருக்கையிலே சந்து, பொந்து களின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராதபடிக்கே, நமக்கு ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி காலதேச வர்த்தமானங்களும், தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும் போது, பல இந்தியருக்குப் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ் சேதங்களும் விளைக்கக் கூடிய குழப்ப வழியில் நாமேன் போக வேண்டும்? பூரீமான் காந்தி யின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேச நலத்தை விரும்புகிரு.ர்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை