பக்கம்:பாரதித் தமிழ்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும் 369

தில்ை, பெருங் கேடுகள் வந்து குறுக்கிடும். ‘உன்வழி உனக்கு: என்வழி எனக்கு: இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்று பட்டிருக்கிருேம். எனவே நாம் பரஸ்பரம் இயன்ற வரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தேவெறுமே இருப்போம். ஆனல் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்’ என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்.

இவ்வித உணர்ச்சி நம்மவருள் பலப்பட்டு சுதேசமித்திரன் முதலிய மேன்மையார்ந்த கருவி களைப் போற்றிக் கையாண்டு, நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலைடயேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸ"தினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிற தென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.

பா. த.-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/368&oldid=605761" இலிருந்து மீள்விக்கப்பட்டது