பக்கம்:பாரதித் தமிழ்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதக் கொத்து 3.71

பூரீமான் லெனினுடைய கொள்கைகளில் மந்திரி மாண்டேகு ஒரு வேளை அனுதாபம் செலுத்து கிருரோ, எப்படியோ என்று அப்பத்திராதிபர் ஊஹிக்கிறார், உள்நாட்டு ராஜரீக விஷயங்களில் ஏற்பட்ட கr பேதத்தைக் கருதி இங்ஙனம் அடாப், பழிகள் ஏற்படுத்தி விடுவது மேற்றிசையில் சில கீழ்த் தர ராஜ தந்திரிகளுக்குள்ளே வழக்கமாக இயல் பெற்று வருகிறது. அந்த வழக்கம் நம்மவருக் குள்ளேயும் பரவி விடாமலிருக்க வேண்டுமென்பதே என் ப்ரார்த்தன.

வெனிஜில்ாளின் கதி

நேசக் கrதியாருக்குச் சார்பாக நின்று, யுத்த காலத்தில் கான்ஸ்டன்டைன் ராஜாவை யவன (கிரேக்க) லிம்ஹாஸனத்தினின்றும் தள்ளி, அதனல் உள்நாட்டில் தோன்றிய கிளர்ச்சியை வெளி புதவியால் நசுக்கித் தம்மைத் தாமே கிரேக்கரின் ஸ்வேச்சாதிபதியாகச் சமைத்துக்கொண்ட மந்திரி வெனிஜிலாஸ்-க்குக் காலம் சரியான கூலி கொடுத்து விட்டது. கிரேக்க ராஜதானியாகிய அத்தேனியா (ஏதென்ஸ்) நகரத்திலிருந்து, நவம்பர் 18-ஆம் தேதி புறப்பட்ட தந்தியொன்றில், இவர் அந் நாட்டி னின்றும், ப்ரிடிஷ் போர்க் கப்பல்களின் பாது காப்பில் வெளியேறிச் சென்று விட்டதாகத் தெரி விக்கப்படுகிறது. நேசக் கட்சியார் ஆட்டியபடி யெல்லாம் ஆடும் பொம்மையாகத் தான் இருந்து கொண்டு, அவர்களுடைய பட்டாள உதவியால் தன் இஷ்டப்படி யெல்லாம் யவன தேசத்தை ஒரு பொம்மைபோல் ஆட்டிக்கொண்டு வந்த வெனிஜி லாஸ் இப்போது, ஸ்மீபத்தில் நடந்த எலக்ஷனில் தோல்வியடைந்ததுமன்றி, எந்த ராஜாவை வீழ்த்து வதில் இந்த மஹான்(!) அன்ய ராஜாங்கத்தாருக்கு உதவி செய்து தன்னுடைய யஜமான விசுவாஸ்த்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/370&oldid=605765" இலிருந்து மீள்விக்கப்பட்டது