பக்கம்:பாரதித் தமிழ்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதக் கொத்து 373

நாடுகளை இன்னும் நேசக் ககதியுடன் சேர்த்துக் கணக்கிடலாமேர், எப்ப்டியோ, என்றால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனினும் அமெரிக்காவ்ை இப்போதும் நேசக் ககதியினருடனே சேர்த்துக் கணக்கிடுதல் பெருங் குற்றமாகாதென்றே நினைக் கிறேன். அந்த அமெரிக்கா இத்தருணத்தில் கிரேக்க ஜனங்களின் ஸ்வ நிர்ணயத்துக்கு மாமுன ப்ரான்ஸ் தேசக் கொள்கையை ஆதரிக்குமென்று நான் நினைக்க வில்லை. நேசக் ககதியாரின் பொது நிலைமை இவ்வா றிருக்க, நேற்றுவரை அந்தக் கட்சிக்கு கிரேக்க தேசம் ஒரு அலங்காரமாக இருந்தது. துருக்கியின் உடைமைகளிற் சிலவற்றை நேசக் ககதியார் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத் ததுபோல், தனக்குக் கீழ்படுத்திக் கொடுக்கப்பெற்ற கிரேக்க தேசத்து ஜனங்கள், இப்போது மற்ற நேசக் ககதியாரின் அபிப்பிராயங்களைக் குறித்து என்ன நினைக்கிறார்களென்பதைக் கவனிப்போம். அவர்கள் நேசக் கrயாரின் எண்ணங்களைச் சிறிதேனும் பொருட்டாக்கவில்லையென்று தெரிகிறது.

நேற்று மித்திரனில் ப்ரசுரம் செய்யப்பட்டிருக் கும் ராய்ட்டர் தந்தியொன்றில்,கிரேக்க ஜனங்களும், கவர்ன்மெண்டாரும், கான்ஸ்டன்டைன் ராஜா திரும்ப வருவதைக் குறித்து லந்தோஷக் கொண் டாட்டங்கள் நடத்தி வருகிறார்களென்றும், எல்லா ஸர்க்கார் கச்சேரிகளிலும், நியாய ஸ்தலங்களிலும் கான்ஸ்டன்டைன் ராஜாவின் சித்திரங்களைத் தொங்கவிட்டு வைக்க வேண்டுமென்று கவர்ன் மெண்டார் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களென்றும் சொல்லப்படுகிறது. மேலும் லண்டனில் கிரேக்க ராஜாங்கத்தின் முக்ய ஸ்தானதிபதியாக வேலை பார்த்தவரும், சென்ற பதினேழு வருஷங்களாக லண்டனிலிருந்து, கிரேக்க தேசத்துச்கும் இங்கிலாந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/372&oldid=605768" இலிருந்து மீள்விக்கப்பட்டது