பக்கம்:பாரதித் தமிழ்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் வேடிக்கை

காளிதாலன்

1 டிசம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 17

குறிப்பு.-இத்தலைப்புடைய கட்டுரையில் ஜாதிபேத விநோதங்கள், திராவிடக் ககதி, ஜப்பான் தேசத்து திருஷ் டாந்தம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் முதற் பகுதி தனிக் க்ட்டுர்ையாக் பாரதி நூல்கள் மூன்றாம் தொகுதி யில் சமூகம் என்ற பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் மற்ற இரு பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

திராவிடக் ககூரி

நான், ஸமீபகாலம் வரை, திருநெல்வேலி ஜில்லாவின் மேற்கோரத்தில் ஒரு நாகரிகமடைந்த கிராமத்தில் குடியிருந்தேன். பொதுப்படையாக நல்ல நாகரிகமடைந்த அந்த கிராமத்துக்கு ஜாதி பேத விரோதங்கள் ஒரு களங்கமாக ஏற்பட்டிருக் கின்றன. கிறிஸ்தவப் பாதிரிகளின் செல்வாக்கு இந்தியாவில் மற்றெந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமாகச் சென்னை மாகாணத்திலும், இந்த மாகாணத்தில் மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருநெல்வேலி ஜில்லாவிலும் ஏற்பட் டிருக்கிறதென்ற செய்தி நம்மவரில் பெரும்பான்மை யோருக்கும் தெரிந்திருக்கக்கூடும். ஆதலால், இங் கிலிஷ் படித்த பிள்ளைகளுக்குள் அந்த ஜில்லாவில் அநேகர் கிறிஸ்தவப் பாதிரிகள் உபதேசத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/375&oldid=605772" இலிருந்து மீள்விக்கப்பட்டது