பக்கம்:பாரதித் தமிழ்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோத வேடிக்கை 377

அதிகமாகச் செவி கொடுத்துவிட நேர்ந்ததென்று நான் தெரிவிப்பது பலருக்கோர் வியப்பாகத் தோன்றாது. ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியா வில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்க மாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளி களாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம் முடைய் நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினர்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளை களுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்கு வதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற் படுத்திக் கொடுக்கவேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். காமம், குரோதம் முதலிய தீய குணங் களை வேதம் அஸாரரென்று சொல்லி, அவற்றைப் பரமாத்மாவின் அருள் வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப் பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸாரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவிலிருந் தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியா வின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு. அதன் பூர்வக் குடிகளைத் தாழ்த்திவிட்டன. ரென்றும் அபாண்டமான கதை கட்டிவிட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்தவப் பாதிரிகள் மிகவும் ஆவலு டன் மனனம் செய்து வைத்துக் கொண்டு தம்மிடம் இங்கிலிஷ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமண ரைத் தவிர மற்ற வகுப்பினர்-தென் இந்தியாவில் மாத்திரம்-அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்தில் (வேத மெழுதிய காலத்தில்!) விரோதிகளாக இருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/376&oldid=605774" இலிருந்து மீள்விக்கப்பட்டது