பக்கம்:பாரதித் தமிழ்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோத வேடிக்கை 379

கோடிகளோ வருஷங்கள் கடந்து போயின. ஐரோப்பியப் பண்டிதரின் கணக்குப்படி பார்த் தாலும் எண்ணுயிர வருஷங்களுக்குக் குறைவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டையை மறுபடி மூட்டு வது என்ன பயனைக் கருதி: யதார்த்தமாகவே, இந்தியா தேச சரித்திரத்தில் ஹிந்துக்களுக்குள் ளேயே தமிழருக்கும் தெலுங்கருக்கும், தெலுங் கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கும் வங்கா

களுக்கும்,வங்காளிகளுக்கும்ஹிந்துஸ்தானிகளுக்கும், பஞ்சாபிகளுக்கும், பஞ்சாபிகளுடன் ராஜபுத்திர ருக்கும், இவர்களுடன் மஹாராஷ்ட்ரருக்கும், மகா ராஷ்ட்ரருடன் ஏறக்குறைய மற்றெல்லாப் பிரிவின ருக்கும், இவற்றைத் தவிர. ஹிந்துக்களுக்கும் மஹ மதியருக்கும் இடையே கணக்கற்ற யுத்தங்களும், அரசு புரிந்தலும் அடக்கியாளுதலும் நடந்து வந்திருக்கின்றன. இதுபோல், ஒரு நாட்டின் உட் பகுதிகளுக்குள் யுத்தங்கள் இந்தியாவில் மாத்திர மின்றி, ஆஸ்திரேலியா முதல் இங்கிலாந்துவரை யுள்ள ஸகல தேசங்களிலும் ஓயாமல் நடந்து வந்திருப்பதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது. இங் ங்னம் நம் நாட்டில், சமீபகால சரித்திரத்திலேயே நிகழ்ந்த எண்ணற்ற போராட்டங்களை மறந்து இன்று தெலுங்கர், தமிழர் முதலிய ஹிந்துக்களும் மஹமதியரும் ஸ்ஹோதரரைப்போல் வாழ வேண்டு மென்ற உணர்ச்சி பரவியிருக்க, எண்ணுயிர வருஷங் களுக்கு முன் “மந்திரங்களாலும், யாகங்களாலும், அஸ்-ர, ராக்ஷஸர்களை ஜயித்த பிராமணர்களை மாத்திரம் நம்மவர் எக்காலத்திலும் rமிக்காமல் உலக முடிவு வரை விரோதம் செலுத்திவர வேண்டு மென்று சொல்லுதல் பெரும் பேதைமையன்றாே? தவிரவும், இந்த நவீன அல்லாதார்’ தாங்கள் அஸார் வம்சத்தாரென்று செல்வதே முற்றிலும் தவறென்பதை ஏற்கெனவே நன்கு நிரூபணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/378&oldid=605776" இலிருந்து மீள்விக்கப்பட்டது