பக்கம்:பாரதித் தமிழ்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பாரதி தமிழ்

செய்திருக்கிறேன். ஜாதி பேதங்களின் கொடுமைகளை உடனே அழித்துவிட வேண்டுமென்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

ஜப்பான் தேசத்து திருஷ்டாந்தம் ஜப்பானில் தீண்டாத வகுப்பினருட்படப் பலவித ஜாதி பேதங்களிருந்தன. எனினும் காலஞ் சென்ற மிகாடோ சக்ரவர்த்தி நவீன உலகத்தின் அவலரங்களைக் கருதி அங்கு ராஜாங்க விஷயங்களில் ஜாதி பேதங்களைக் கருதக்கூட்ாதென்று சட்டஞ் செய்தார். எத்தனையோ, நூற்றாண்டுகளாக இயல் பெற்று வந்த பேதக் கொடுமைகள் அங்கு ராஜரீகத் துறையில் மட்டுமேயன்றி, ஸமூஹ வாழ்விலும் புலப்படாதபடி அதிசீக்கிரத்தில் மறைந்து போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இதுதான் வழி. நாம் ஏற்கெனவே தெரிவித்தபடி ஸ்வராஜ்யம் கிடைத்தால் இந்த ஜாதி பேதத் தொல்லைகளையெல்லாம் சட்டம் போட்டு நீக்கி விடலாம். இப்போதுள்ள அதிகாரிகள் இவ்வித மான சட்டம் ஏற்படுத்துவார்களென்று எதிர் பார்ப்பதே தவறு. ஆதலால் இந்தியாவின் ஸ்மூஹ வாழ்க்கையில் ஸ்மத்வமேற்படுத்த விரும்புவோர் முதலாவது ராஜரீகத் துறையில் ஸ்மத்வமேற்படுத்த முயலும் காங்ரஸ் ககதியாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/379&oldid=605778" இலிருந்து மீள்விக்கப்பட்டது