பக்கம்:பாரதித் தமிழ்.pdf/380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோத விஷயங்கள்

காளிதாஸன்

2 டிசம்பர் 1920 ரெனத்திரி கார்த்திகை 18 ஸர். ஹாமர் க்ரீன்வுட்டின் உபதேசம்

காரியமாக வேண்டுமானல் குதிரையின் காலை யும் பிடிக்கலாமென்ற ராஜ்ய நீதியை ஐரிஷ் மந்திரி யாகிய ஸர். ஹாமர் க்ரீன்வுட் நன்கு படித்து வைத் திருக்கிரு.ர். சில தினங்களின் முன்பு ப்ரிடிஷ் பார்லி மெண்ட் ஸ்பையில் இவர் பேசியபோது ஐர்லாந்தி லுள்ள ரோமன் கத்தோலிக்க குருக்களுக்கு ஒரு விஞ்ஞாபனம் செய்திருக்கிறார். எ ைத ப் பற்றி யெனில், முன்பு மஹாயுத்த காலத்திலே ஜர்லாந்தில் கட்டாய ராணுவ ஸேவகம் ஏற்படுத்துவதை ஐர் லாந்தின் கத்தோலிக்க குருக்கள் எத்தனை தீவிர மாகவும் உக்ரமாகவும் எதிர்த்தார்களோ, அத்த உக்ரமாகவும், தீவிரமாகவும் ஐர்லாந்தில் இப்போது நடக்கும் ஸின்பீன் கொலைகளை அவர்கள் எதிர்த்து வேலை செய்ய வேண்டுமென்றும், ஜனங்கள் தங்க ளிடமுள்ள துப்பாக்கி முதலிய ஆயுதங்களை குருக் களின் வசம் ஒப்புவித்துவிட வேண்டுமென ஆலயங் களில் செய்யப்படும் உபதேசங்களிடையே அவர்கள் ஜனங்களைத் தூண்டுதலே நல்ல உபாயமென்றும் மந்திரி ஹாமர் க்ரீன்வுட் தெரிவிக்கிரு.ர். ஆமாம்!